சுமந்திரனின் வால்பிடிக்கும் வித்தி - மாகாண சபை ஆசனத்துக்கு குறி வைக்கிறாரா?


ஒவ்வொரு தேர்தலிகளின்போதும் பல்வேறு வழிமுறைகளில் முயன்றும் ஆசானம் கிடைக்காமல் தவித்துவரும் ஜனாநாயகப் போராளிகள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ந.வித்தியாதரன் தற்போது மாகாணசபைத் தேர்தல் ஆசனம் பெறுவதற்காக சுமந்திரனின் வாலினைப் பிடித்துத் தொங்க முற்படுவதாக தெரியவருகின்றது.

நேற்று சாவகச்சேரியில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் ஓராண்டு நினைவு நிகழ்விலும் வித்தியாதரன் சுமந்திரனுடனேயே ஒட்டி ஒட்டி அமர்ந்திருந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததோடு தனது உரை முழுவதையும் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு ஒதுக்காது சுமந்திரன் புகழ்பாடுவதிலேயே செலவழித்திருந்தார்.



ஒரு கட்டத்தில் சுமந்திரன் கூறுபவைத்தான் சரி அவர் ஜதார்த்தமானவற்றையே பேசுகிறார் என்ற தொனிப்பட வித்தியாதரனின் உரை அமைந்திருந்தது.

ஒரு காலத்தில் சிறந்த ஊடக ஜாம்பவானாக மதிக்கப்பட்ட ந.வித்தியாதரன் தனது அரசியல் பேரவாவின் காரணமாக சில முன்னாள் போராளிகளோடு இணைந்து ஜனாநாயகப் போராளிகள் எனும் அரசியற் கட்சி ஒன்றினை உருவாக்கி கடந்த தேர்தலிகளில் போட்டியிட்டிருந்தார்.

கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அடிக்கடி விருந்துக்குச் சென்றுவருபவரான வித்தியாதரன் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஊடாக யாழ் மாநகரசையின் முதல்வர் வேட்பாளரா போட்டியிடுவதற்கு கடுமையாக முயற்சித்திருந்தார்.



எனினும் ஊடகத்தை வியாபாரமாக நடத்தும் அவரது மைத்துனரான நாடாளுமன்ற உறுப்பினர் வித்தியாதரனுக்கு ஆசனம் கொடுத்தால் தனது பத்திரிகை தமிழரசுக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கும் என மிரட்டவே வித்தியாதரனுக்கான வாய்ப்பு கைநழுவிப் போக சுமந்திரனின் விசுவாசியான ஆலோல்ட் யாழ் மாநகர முதல்வராகினார்.

இந்நிலையில் சுமந்திரனை கடுமையாக விமர்சித்த்துவந்த வித்தியாதரன் தற்போது சுமந்திரனுாடு ஒட்டி உறவாட முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.



அண்மையில் முன்னோக்கி நகர்வோம் எனும் அரசியல் நிறுவனம் ஒன்றினை ஈபிடிபியின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான தவராசா மற்றும் முருகேசு சந்திரகுமாருடன் இணைந்து உருவாக்கியிருக்கும் வித்தியாதரன் தற்போது தனது காலைக்கதிர் ஊடாகவும் சுமந்திரனுக்கு வால் பிடிக்கும் செயற்பாட்டினையும் விரிவுபடுத்தியுள்ளார்.












No comments