போருக்குப்பின் வடக்கில் 131 விகாரைகள் - முல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள்!!


வடக்கில் 2009 போருக்குப் பின்னரான ஒன்பது வருட காலப்பகுதியில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறுகிறார்.

பௌத்தர்கள் வாழாத வடக்கு மாகாணப் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் முல்லைத்தீவு மன்றும் வவுனியா மாவட்டங்களில் போருக்கு பின்னர் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகின்றமை இதன்மூலம் அமம்பலமாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டவகையில் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இது குறித்து தமிழ் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்து மக்கள் பெரும் ஆதங்கத்தில் இருப்பதாக தெரிவித்த அவர்
இனிமேலாவது வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதுடன் சேர்த்து பௌத்தமயமாக்கலையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கப்படவேண்டியது கட்டாயமாகும் என்றும் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments