எதிர் தரப்பு அவுட்:முடங்கிய கரைச்சி பிரதேசசபை!


தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தொங்குநிலை ஆட்சியிலுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் எதிர்தரப்பு உறுப்பினர்கள் கூட்டாக புறக்கணிப்பு செய்தமையால் சபை அமர்வினை கொண்டுநடத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அவர்களது புறக்கணிப்பினால் பெரும்பான்மையை சபை இழந்தமையாலேயே இந்நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 13 உறுப்பினர்களை கொண்ட சபையில் 7 உறுப்பினர்கள் விசேட அமர்வில் கலந்துகொள்ளவில்லை. இதனால் பெரும்பான்மையின்றி காலை 9.45 மணிக்கு ஆரம்பமான கூட்டம் 11 மணிக்கு நிறைவுக்கு வந்திருந்தது.

கிளிநொச்சியில் பூநகரி தவிர்ந்த கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசசபைகள் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஆதரவாளர்களது கைகளிலுள்ளது.அவற்றின் தவிசாளர்களாக சிறீதரனின் உதவியாளர்களேயுள்ளனர்.

இந்நிலையில் சிறீதரனின் போட்டி அரசியாலாளராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிடிபி முன்னாள் பிரமுகருமான சந்திரகுமாரின் ஆதரவு தரப்பினர் சபை அமர்வுகளில் தொடர்ச்சியாக குழப்பங்களை ஏற்படுத்திவருகின்றனர்.

No comments