வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் 500 பேரின் விபரங்கள் வெளியீடு


இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியர்களின் பட்டியலை, ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குழு வெளியிட்டுள்ளது.

இந்தக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்ட 500 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்களை கண்டுபிடித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான குழுவின் தலைவர் சுயெலா ஜனினா குறிப்பிடுகையில்,

”வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் குடும்பம், உறவுகள், நண்பர்கள் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டவரின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஒவ்வொரு நொடியும் கலக்கத்துடனேயே உள்ளனர்.

அவர்களைக் கருத்திற்கொண்டே, விரைந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையிலுள்ள வலிந்து காணாமலாக்கப்படோரின் பெயர்ப் பட்டியலை நாம் வெளியிட்டுள்ளோம்” என்றார்.

No comments