தென்னிலங்கை மீனவர்கள்: போராடும் சுமந்திரனின் விசிறிகள்!


சர்ச்சைக்குரிய வகையில் வடமராட்சியின் மந்திகையில் அமைந்துள்ள சட்டவிரோத ஒட்சிசன் வாயு மீள்நிரப்பு நிலையத்தை கூட்டமைப்பு சார்பு பருத்தித்துறை பிரதேசசபை காப்பாற்ற முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.உரிய அனுமதிகள் ஏதுமற்ற ஒட்சிசன் வாயு மீள் நிரப்பும் நிலையத்திற்கு எதிராக இன்று 11ம் திகதி வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வாக்குறுதி அளித்திருந்த பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அரியகுமார் அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லையென மேலும் தெரியவருகின்றது.தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தீவிர விசியான இவர் வினைத்திறனற்றுள்ளதாக சக உறுப்பினர்களே குற்றஞ்சாட்டுக்கின்றனர்.

முன்னதான கடந்த மாதம் 25ம் திகதி இடப்பட்டு 07 நாட்களில் அந்நிலையத்தை மூடுமாறு தவிசாளாரால் உரிமையாளருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. குறித்த கால எல்லை முடிவுற்ற பின்னரும்  இயங்கும் அந்த நிலையத்திற்கு எதிராக கடந்த 3ம் திகதியன்று பிரதேச சபை செயலாளர் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவோடு அந்த நிலையத்தை மூடி இருக்கலாம்.ஆனால் இன்னும் ஒரு சிறுதுரும்பும் அசைக்கப்படவில்லையென இளம் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
இதனிடையே இன்று காலை தவிசாளரை தொடர்பு கொண்டபோது தான் ஒரு உத்தியோகத்தரை காவல்நிலையம் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த சட்டவிரோத ஒட்சிசன் வாயு மீள்நிரப்பு நிலைய உரிமையாளர் தன்னை மிரட்டியதாக சமூக செயற்பாட்டாளர்கள் சிலரிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனிடையே பிரதேசசபை உத்தியோகத்தர் காலையில் வந்திருந்ததாகவும் ஒட்சிசன் வாயு மீள்நிரப்பு நிலைய உரிமையாளுடன் சமரசம் செய்துவிட்டு போய்விட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தென்னிலங்கை மீனவர்களை காப்பாற்ற கூட்டமைப்பின் வசமுள்ள பருத்தித்துறை பிரதேசசபை முற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

No comments