முல்லைதீவில் செல்பி எடுத்தது வடமாகாணசபை!


முல்லைதீவு நில ஆக்கிரமிப்பு பகுதிக்கு வடமாகாணசபை உறுப்பினர்கள் செல்பி எடுப்பதற்காகவே அண்மையில் விஜயம்  செய்திருந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வுடமாகாணசபை உறுப்பினர்கள் உறுப்பினர்கள் கடந்த மாதம் 10ம் திகதி முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். 

இதன்போது, முல்லைத்தீவில் இடம்பெற்று வரும் சிங்களக்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், கொக்கிளாயில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் விகாரை, சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை என்பவற்றை பார்வையிட்டதுடன், அவை தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.

ஆனால் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாது சிங்கள குடியேற்றங்கள் தொடர்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய வடமாகாணசபை அமர்வில் இதனை குற்றஞ்சாட்டிய அவர் நாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

No comments