மைத்திரியின் பட்டியலில் கூட்டமைப்பு வெளியே!

வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகளை நெறிப்படுத்தல், கூட்டிணைத்தல் மற்றும் தொடராய்வு செய்தல் ஆகிய பணிகளுக்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட்டமைப்பினை புறந்தள்ளி 48 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் செயலணியில் இடம்பெற்றுள்ளபோதும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் குழுவில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜக்கிய தேசியக்கட்சி சார்பு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் பட்டியலில் உள்ளடங்கியிருக்கவில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அமைச்சர் மனோ கணேசன், கிழக்குமாகாண ஆளுநர் ரோகித போகல்லாஹம, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்த்தன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அடமிரல் சிறிமெவண் ரணசிங்க, விமானப் படைத் தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பதி, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர,யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி, கிழக்கு மாகாண தளபதி மேஜர் ஜெனரல் சந்துதித்த பணன்வெல மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் ஆகிய 48 உறுப்பினர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments