போராடினால் தான் வாழ்வு:முதலமைச்சர்!

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்களின் தேவைகள் அனைத்தையும்; போராடிப்பெறவேண்டிய ஒரு கட்டாயத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்க  வேண்டிய  முறையான உரித்துக்களைக் கூட  கையளிப்பதற்கு  அரசாங்கம் பின்னிற்கின்றதென வடமாகாண முதலமைச்சர் மீண்டும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் பத்திரிகையிலும் ஊடகங்களிலும் வெளிவந்த ஒரு செய்தியில் இராணுவத் தளபதி  ஒருவரின் செயலை  பாராட்டிக் கௌரவித்து அவருக்கு  மலர் மாலைகள் அணிவித்து  பல்லக்கில் ஏற்றிவந்துவிடை கொடுத்து அனுப்பியதாக செய்திகள் வெளிவந்தன. 
அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதற்கு இயல்பாகவே அந்த அலுவலர்அவ்வாறான நல்ல குணநலன்களைக்கொண்டிருந்தாராஅல்லது அவ்வாறு இயங்குமாறு பணிக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய அவர்கள் செயற்பட்டார்களா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவரால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு செலவிடப்பட்ட நிதிகள் எங்கிருந்து வந்தன என்பன பற்றி எதுவுமே கூறப்படவில்லை. முன்பள்ளி ஆசிரியர்கள் எம்மால் ரூபா 6000 வழங்கப்பட்டு வருகின்றனர்

சிவில் பாதுகாப்பு பிரிவினருக்கு ரூபா 30000 க்கு மேலாக வழங்கி வந்துள்ளது. இந் நிதிஇதற்கென இராணுவத்திற்கு ஒதுக்கி வைத்த பணமாக இருக்க முடியாது. இவ்வாறான செலவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் இராணுவம் திட்டமிட்டே ஐந்து மடங்கு சம்பளம் கொடுத்து எமது மக்களை விலைக்கு வாங்குகின்றதோ என்று எண்ணவேண்டியுள்ளது. அவர்களுக்கான மேலதிக பணம் எங்கிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை இராணுவம் விபரிக்க வேண்டும். இந்த நிதிகள் வடமாகாண சபைக்கு வழங்கப்பட்டிருப்பின் அல்லது வடமாகாண சபையின் ஒத்திசைவோடு மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டிருப்பின் எம் மக்களை விலைக்கு வாங்கும் ஒரு கைங்கரியமாக அது அமைந்திருக்காது. 

யுத்த காலப் பகுதியில்  எமது உறவுகளை  முதியவர்,குழந்தைகள், பெண்கள், இளைஞர், யுவதிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் என்ற எதுவித  வேறுபாடுகளோ  தயவுதாட்சண்யமோ  இன்றி கொத்துக் கொத்தாக கொன்று குவித்த  நிகழ்வுகளை நேரில் பார்த்த  எவருக்கும் அவை மறந்து போய்விட ஞாயமில்லை. அவ்வளவு உயிர்களையும்  காவு கொள்வதற்கு  தாம் சார்ந்த ஒரு அமைப்பு காரணமாக இருந்ததே என்ற கவலை குறித்த இராணுவ அலுவலருக்கு இருந்ததோ நான் அறியேன். இருந்திருந்தால் அந் நினைவு வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும்  என்று எதிர்பார்க்கலாம்.

அதனடிப்படையில்தமது தவறுகளை சீர் செய்வதற்கும் அல்லது  இறைமன்றாட்டம் மேற்கொள்வதற்குமாக  இவ்வறான தார்மீக சிந்தனைகள்  அந்த அலுவலரிடம் தோற்றம் பெற்றிருக்கக் கூடும் என்பதை நாம் உணர வேண்டுமெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments