வன்னியில் போலி ஆவணங்களுடன் காணி பிடிக்கும் ஆமி!

இலங்கை படையினரது ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு பகுதியை ஆக்கிரமிக்க போலியான சம்மதக்கடிதங்களை படைத்தலைமையகம் தயாரித்தமை அம்பலமாகியுள்ளது.ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 59 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களில் 40பேர் தமது நிலங்களை படையினருக்கு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனரென பாதுகாப்பு தரப்பால் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இத்தகைய மோசடியே அம்பலத்திற்கு வந்துள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் இருவரும் உள்ளுரை சேர்ந்த சிலரும் கேப்பாபுலவு நிலத்தில் நந்திக் கடலோரம் உள்ள நிலத்திற்கான பணத்தினை வழங்கினால் படையினருக்கு நிலத்தை வழங்க இணக்கம் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.அவ்வாறு 40 நில உரிமையாளர்களின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஒன்றை படைத்தரப்பு மீள் குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் செந்தில்நந்தனனிடம் வழங்கியிருந்ததாக சொல்லப்படுகின்றது.

படையினருக்கு காணிகளை வழங்க ஒப்பமிட்டு வழங்கியதாக கூறப்படும் 40பேரில் இருவர் புலம்பெயர் நாட்டில் வாழ்கின்றனர்.

அவ்வாறு அயல்நாட்டில் வாழும் உரிமையாளர் ஒப்பம் உட்படவே 40 உரிமையாளரின் சம்மதத்தை படையினர் ஒப்படைத்திருந்த நிலையில்  அதில் பெயர் குறிப்பிடப்பட்ட 30 பேர் தமது நிலத்தை படையினருக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கவில்லையென தற்போது அம்பலப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் எமது நிலத்தை படையினர் கபடமாக அபகரிக்க முயல்வதோடு அதற்கு உள்;ரில் சிலர் துணைபோவதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை குறித்த 59 ஏக்கர் நிலமும் 55பேருக்குச் சொந்தமானதென தெரியவருவதுடன் அதனை விடுவிக்கவே மக்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments