காணாமல் போனோர் தொடர்பாக வடக்கு கிழக்கில் 8 அலுவலகங்கள் திறக்க முடிவு



காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தின் அலுவலகங்களை பிரதேச மட்டத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 8 அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட இருப்பதாக அந்த அலுவலகத்தின் தலைவருர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

 இதேபோன்ற அலுவலகத்தின் சந்திப்பு எதிர்வரும் 13ம் திகதி திருகோணமலையில் இடம்பெறவிருப்பதாகவும் அவர் கூறினார். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இது தொடர்பான நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக, கருத்துத் தெரிவித்த தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், கடந்த 10 வருட காலமாக இந்த விடயம் தொடர்பில், நீதி நிலைநாட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினரிடம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


இந்நிலையில் நேற்றயதினம் முல்லைத்தீவிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தினர் சந்திக்கச் சென்றிருந்தபோதிலும் இந்த அலுவலகம் எமக்கு தேவையில்லை என தெரிவித்த காணாமல் ஆக்கபப்ட்டவர்களின் உறவுகள்  குறித்த அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  நேற்று முல்தைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments