சலீம் மைதானமும் பொசன் விழாவும்!



ஈழமண்ணின் விடுதலைக்காக வித்தாகிய லெப் சலீம் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தை இலங்கை இராணுவத்திற்கு தாரை வார்த்து தமது அடிமை விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர் கரணவாய் குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தினர்.

தமிழின விடுதலைக்காக களமாடிய சலீமின் இயற்பெயர் சண்முகசுந்தரம் அரவிந்தன்.பிரபல ஆசிரியர் சண் மாஸ்டர் என்றழைக்கப்படும் சண்முகசுந்தரத்தின் மகனான சலீம் முதல் கரும்புலி தாக்குதலை மில்லர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் மீது நடத்துகையில் உதவியாக நின்றிருந்தவன்.தனது சொந்த மண்ணில் மோதலில் களப்பலியாகிய பெருமையும் சலீமிற்கு கிட்டியிருந்தது.

சலீமிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குஞ்சர்கடைப்பகுதியில் பருத்தித்துறை வீதியோரமாக விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டிருந்தது.

1996ம் ஆண்டின் பின்னர் இராணுவத்தினர் பயன்படுத்தி விடுவிக்கப்பட்ட மைதானத்தை கொலின்ஸ் மைதானமாக பெயர்மாற்றிய கும்பலொன்று தற்போது அரச அமைச்சராகியிருக்கின்ற அங்கயனின் மைதானமாக அதனை மாற்றியிருந்தது.

தற்போது அடுத்த கட்டமாக இனஅழிப்பு இராணுவத்திற்கு வெள்ளையடிக்கவென இக்கும்பல் தாரை வார்த்துள்ளது.இதன் தொடர்ச்சியாக இன்று புதன்கிழமை பருத்துரையில் தர்மத்தை வளர்ப்பதாக சொல்லி பொசன் கொண்டாட்டங்கள் படையினரால் அரங்கேற்றப்பட்டுள்ளது.

முதன்முறையாக சிங்கள பௌத்த குடியிருப்பாளர்கள் எவருமேயற்ற வடமராட்சியில் ஆக்கிரமித்திருக்கின்ற சிங்கள படைகளிற்கு லெப் சலீம் மைதானத்தை தாரைவார்த்து தங்கள் அரசின் அடிவருடி விசுவாசத்தை விளையாட்டுக்கழகம் நிறைவேற்றியிருப்பதாக மக்கள் சீற்றமடைந்துள்ளனர்.

முன்னரும் அனஅழிப்பு இலங்கை படைகளுடன் நட்புறவு விளையாட்டு நிகழ்வுகளை நடத்திய இக்கும்பல் இனிமேல் தமது  சிங்களபடைகளிற்கு திருமணம் செய்துவைப்பார்களோவென பொதுமகன் ஒருவர் சீற்றத்துடன் கேள்வியெழுப்பியிருந்தார்.

No comments