வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு ஆப்பு!

வடமராட்சி கிழக்கின் மருதங்கேணிப்பிரதேச செயலாளரை சிக்கவைக்க இலங்கை அரசு காய்களை நகர்த்த தொடங்கியுள்ளது.அவர் இனத்துவேசமாக நடந்துகொள்வதாக கூறி இலங்கையின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விளக்கம்கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் தொழில் புரியும் இடத்திற்கான அனுமதி அப்பகுதி பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டிருக்கவில்லை.குறித்த அனுமதியை வழங்குமாறு கொழும்பிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதும் அவர் அசைந்து கொடுத்திருக்கவுமில்லை.

உள்;ர் மீனவ அமைப்புக்கள் சுட்டிக்காட்டியது போன்று கடலட்டை பிடிப்பவர்கள் சட்டவிதிமுறை மீறிய விடயங்களை பிரதேச செயலர் அதற்கான காரணங்களாக சுட்டிக்காட்டியுள்ளார்.இதனால் தென்னிலங்கை மீனவர்கள்; கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் அதிகாரிகளை கடிந்துள்ளனர்.அதனையடுத்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களத்திடம் முறையிட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு குறித்த பிரதேச செயலாளரிடம் எழுத்தில் விளக்கம் கோரியுள்ளது. தென்னிலங்கை மீனவர்களது முறையற்ற கடலட்டை பிடிப்பினை அனுமதிக்காமை தொடர்பாகவே அவர் பழிவாங்கப்படுவதாக சொல்லப்படுகின்றது.

No comments