பேஸ்புக்கில் சிங்கள மொழி தெரிந்தவர்களே அதிகளவில் வேலைக்கு இணைப்பு

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் பௌத்தர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையியே ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்நாடு முழுதும் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது. மேலும், வன்முறை ஏற்படவும் அது மேலும் பரவவும் பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட எரிச்சலூட்டும் வார்த்தைகள் முக்கிய காரணமாக அமைந்தன.

மேலும், சிங்கள மொழியில் சமூக விரோதிகள் பதிவிட்ட விரும்பத்தகாத மற்றும் எரிசலூட்டும் சிங்கள மொழி வார்த்தைகளை அடையாளம் கண்டு நீக்கவில்லை என ஒரு வார காலத்திற்கு பேஸ்புக்கை முடக்கி அந்நாட்டு தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டது. வன்முறையில் இருந்து இலங்கை சுமூக நிலைக்கு திரும்பிய பின்னர் பேஸ்புக் நிறுவனம்  நடந்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது. 

இந்நிலையில், இது போன்ற நிலை வருங்காலத்தில் மேலும் ஏற்படாமல் தடுக்க அந்நாட்டில் இயங்கி வரும் பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிங்கள மொழி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பேஸ்புக்கில் நிறுவனம் தற்போது பணியில் அமர்த்தி வருகிறது.  

No comments