பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாடு

கடந்த வியாழக்கிழமை 31.05.2018 அன்று ' ஈழத்தமிழர்கள் இறைமையுள்ள மக்களா?' என்ற தலைப்பில் பிரெஞ்சு நாடாளுமன்ற மண்டபத்தில் இந்த மாநாடு இடம்பெற்றது.

கம்யூனிஸ்ட்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள்  நலன் பேணும் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவருமான திருவாட்டி Marie George Buffet,  உலகத்தில் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து ஒருநிமிட அமைதி வணக்கத்துடன்  மாநாட்டைத் தொடக்கிவைத்து உரையாற்றினார். தமிழரின் தாயகப்பகுதியில் இருந்து சிறிலங்காப்படையினர் வெளியேறவேண்டும். சர்வதேச சுயாதீன விசாரணைநடத்தப்படவேண்டும். மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தவேண்டும்.போன்ற விடயங்களை வலியுறுத்தினார் அத்துடன் இவ்வாறு நாம் தொடர்ச்சியாக நடாத்தும் நிகழ்வுகள் மூலமாக பிரான்சு அரசின் கடமை பாட்டை முக்கியப்படுத்துவதோடு, தமிழ் மக்களின் பிரச்னைக்கு பிரஞ்சு அரசு முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என்று அதன் அடிப்படையில் தமிழருக்கான பாராளுமன்ற குழு இயங்கும் என்றார்.

ஐக்கிய ஜனநாயக கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. Jean Christophe Lagarde உரை நிகழ்த்தியபோது, பிரான்சின்  சனநாயகப் பெறுமதிகளை

ஆதர்சமாகக் கொண்டு நாம் தமிழரது பிரச்சனையில் முன்னகர முடியும் என்றார். சர்வதேசசட்டவிதிகளை நடைமுறைப்படுத்தி

இலங்கையில் அமைதியினைக்கொண்டு வரமுடியும் என்றும், பிரெஞ்சு ஆட்சியாளருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மாநாட்டில் பேசப்படும்  விடயங்கள் எடுத்துச்செல்லப்படும் என்றார்.



பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் சார்பில் உரை நிகழ்த்திய   திரு.திருச்சோதி அவர்கள், இன்றைய உலகத்தில் நாடுகள்  நாடுகளுக்க்கான இறைமையை முன்வைத்து  சர்வதேசக்குற்றங்களில் இருந்து  தமக்கு பாதுகாப்பு தேடிக்கொண்டு இருக்கும் சூழலில், இறைமை என்பது மக்களுக்குரியதா அல்லது நாடுகளுக்கு உறியதா என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது. அதில் சிறி லங்கா அரசை இன்று தமிழருக்கு எதிரான இனப்படுகொலைக்கு சர்வதேச நாடுகள் நீதிகோரும் விடயத்தில் சிறி லங்கா அரசு, சிறி லங்கா வின் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என்றும் அதட்கான நீதியை வழங்கும் திறமை தம்மிடம் இருக்கிறது என்று நாட்டின் இறைமையை வைத்து தம்மை பாதுகாத்துக்கொண்டு இருக்கும் சூழலில், 3000 வருடத்துக்கு மேலாக அந்த நாட்டில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களின் இறைமை எங்கே போய் விட்டது என்ற கேள்வியை கேட்க வேண்டிய சூழல் இன்று வந்திருக்கிறது.   தமிழர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வசித்து வருகிறார்கள என்பதை வரலாற்றுபூர்வமாக எடுத்துரைத்து, இறைமை மக்களுக்கா அல்லது அரசுக்கா உரித்துடையது என்று கேள்வி எழுப்பினார்! காலனித்துவ காலத்தில் பிரித்தானிய அரசு தமிழர்களின் இறைமையை பறித்து சிறி லங்கா அரசிடம் தமிழர்களின் இறைமைய கையளித்ததில் இருந்து தமிழர்களை அழிக்க சிங்கள  பௌத்த சிறி லங்கா அரசு ஆரம்பித்தது, தமிழீழ விடுதலை புலிகள் தமிழ் பகுதிகளில் ஒரு இடைக்கால அரசை உருவாக்கி தமிழீழ நடைமுறை அரசை நடாத்திய போது தமிழீழ மக்கள் தமது இறைமையை மீண்டும் பெற்றார்கள் என்று கூறலாம், அந்த இறைமை 2009 யில் மீண்டும் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு இன்று தமிழீழ மக்கள், தமது இறைமையை இழந்து சிறி லங்கா அரசின், சிறி லங்காவின் அத்தனை படைப்பிரிவுகள் ஆக்கிரமிப்பில் வாழும் மக்களாக வாழ வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சிறி லங்கா வின் இறைமைக்கு யாரும் தலையிட முடியாது என்று சர்வதேசத்துக்கு சவால் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள், இந்த சூழலில் சென்ற மார்ச் மாதம்  ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையில் பிரித்தானிய அரச ராஜதந்திரிகளை சந்திக்கும் போதும் அவர்கள் கூறிய ஒரு வாதம் ' சிறி லங்கா இறைமை உள்ள அரசு, அதில் தங்கள் விரும்பியது போல் தலையிட முடியாது என்பது' , அன்று அவர்களிடம் ' தமிழர்களின் இறைமையை இல்லாமல் ஆகியவர்கள் யார் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற கூற்றுடன், சிறி லங்கா என்ற தீவில் 3000 வருட சரித்திரத்தை கொண்ட தமிழர்கள், எங்களுக்கான இறைமையை வலியுத்த வேண்டும், அதை எவ்வாறு மீட்டெடுப்பது என்ற கேள்வி ஆய்வாளர்கள், அரசுகள் முன் வைக்கப்பட்டது.

இந்த மாநாட்டில்  அண்மையில் சுய ஆட்சிக்கான சர்வஜன வாக்களிப்பை நடாத்தி பிரிந்து செல்வதுக்கான மக்கள் ஆணையை பெற்ற  இராக் குர்திஸ்தான் தன்னாட்சியை கொண்டு இயங்கி கொண்டிருக்கும் அரசின் பிரான்சு தூதரகம் பிரதிநிதி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு எமக்கான ஆதரவை அவர்கள் தந்திருந்தார்கள்.

இராக் குர்திஸ்தானை பிறப்பிடமாக கொண்ட சமூக விஞ்ஞானத்துறை ஆய்வாளரான குர்திஸ்தான் நாட்டைச் சேர்ந்த முனைவர் யுனநட டீயமயறயn நாடற்ற தேசிய இனங்கள் தொடர்பில் தன் கருத்துரைகளை வழங்கினார். குறிப்பாக தமிழ்- குர்திஸ் மக்களின் போராங்களை ஒப்பீடு செய்து கருத்துகளைப் பரிமாறினார். எமது உரிமையை எமது இறைமையை வலியுறுத்துவத்துக்கான கருத்துக்களை முன் வைத்தார்.

பிரித்தானியாவில் இருந்து தாம் ஆய்வு செய்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் வெளியிட்ட  அரசு மற்றும் அரசியலில் சிறலங்கா, உயிரியல் மற்றும் பாதுகாப்பு கலந்து கொண்ட முனைவர் சிறிஸ்கந்தராசா, இலங்கை அரசியல் யாப்பு மற்றும் இறையாண்மை குறித்த தனது விமர்சனப் பார்வையை முன்வைத்தார். என்ற பெயரில் வெளியிட்ட புத்தகத்தை வெளியிட்டதோடு அதில் சிறி லங்கா நாடு என்ற அடிப்படையில் இருந்து சிறி  லங்கா தவறி விட்டது, இறைமை என்ற கோட்பாட்டிலும், சிறி லங்காவின் யாப்பை ஆய்வு செய்தது இருந்து அந்த நாடு தமது நாட்டுக்கான அந்தஸ்தில் இருந்து தவறி விட்டது  சிறி லங்காவில் தமிழர்க்கு ஆனா பாதுகாப்பை  வழங்க போவதில்லை, ஆகவே சர்வதேசம் தலையிட்டு தமிழருக்கான பாதுகாப்பை பொறுப்பு ஏற்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

முனைவர் Ines Hassan அவர்கள்  ஜனநாயகம் சுயநிர்ணய உரிமை மற்றும் முனைவர் சிறிஸ்கந்தராஜாவின் புத்தகத்தை ஆய்வுக்குள் உள்ளாகி அதில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய விடயத்தை இறைமை, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை வலியுறுத்தினார்.

அவரை தொடர்ந்து ஜெனீவா பல்கலைகழகத்தில்  இருந்து வந்திருந்த கனடாவை சேர்ந்த திரு Lorenzo Fiorito தமிழ் மக்களின் இறைமை தமிழ் மக்களின் பிரதேச உரிமை ஆகியவற்றை ஆய்வுக்குள் உட்படுத்தி தமிழருக்கான அரசியல் தீர்வு தமிழீழம் என்பதை வலியுறுத்தினார்.

அத்துடன் வழக்கறிஜர்கள், மருத்துவர்கள், வேற்றுக் கட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கு பற்றி தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்த மாநாட்டில் பெருமளவில் புலம் பெயர் இளம் தலைமுறையினர் பங்கேற்று ஆர்வத்தோடு தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது!






















No comments