கிழக்கில் மருத்துவபீடம் மீண்டும் திறப்பு! பகிடிவதை தொடராது மாணவர்கள் எழுத்துமூலம் வாக்குறுதி!

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இனிமேல் பகிடிவதை தொடராது என  மருத்துவ பீட மாணவர்களால்  பீடாதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ  பீட பீடாதிபதி  வைத்தியர் திருமதி.ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்தார்

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட பகிடிவதை காரணமாக கடந்த மே மாதம் 25 ஆம் திகதி முதல் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம்  கலவரையற்று மூடப்பட்டிருந்தது .

இந்த நிலையில் மருத்துவ பீட மாணவர்களுக்கு , மருத்துவ பீட பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்  பகிடிவதை இனி மேலும் தொடராது என்று மருத்துவ பீட மாணவர்களால்  பீடாதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியைப்  பரிசீலனை  செய்த கிழக்குப் பல்கலைக்கழக மூதவை பீடம் கல்வி நடவடிக்கைகளுக்காக  மீண்டும் ஆரம்பிக்க ஆவன செய்துள்ளது. 

இதன்படி இறுதி ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் தொடர்ந்து ஏனைய வருட மாணவர்களின்  கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்  என  கிழக்கு பல்கலைக்கழக மூதவை  பீடாதிபதி  வைத்தியர் திருமதி  ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்தார்.

No comments