வெளிப்பட்டது தாக்குதல் நாடகத்தின் உண்மைக்கதை!


யாழில் டாண் தொலைக்காட்சி மற்றும் காலைக்கதிர் பண சேகரிப்பாளர் தாக்கப்பட்ட விவகாரம் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட நாடகமென்பது அம்பலமாகியுள்ளது.டாண் தொலைக்காட்சி தனது போட்டி நிறுவனமான யூ.எஸ்.கேபிள் நிறுவனத்தினரை சிக்கவைக்க திட்டமிட்டு அதன் உரிமையாளரான குகநாதனின் வழிப்படுத்தலில் இந்நாடகத்தை அரங்கேற்றியதாக இலங்கை புலனாய்வு கட்டமைப்பு கண்டறிந்துள்ளது.குறித்த தாக்குதலை நடத்தி அதனை தனது போட்டி நிறுவனமான யூ.எஸ்.கேபிள் நிறுவனத்தின் பேரில் போட முயற்சிகள் நடந்துள்ளன.எனினும் இம்முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையினில் குறித்த தாக்குதலை பேசுபொருளாக்க ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்ததாக தெரியவருகின்றது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்க அரசியல் தலைவர்களை காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் மற்றும் டாண் தொழிலாளியொருவர் அழைப்பு விடுத்திருந்ததாக தெரியவருகின்றது.

எனினும் யாழிலுள்ள பத்திரிகை நிறுவனங்களோ ஊடக அமைப்புக்களோ அதில் பங்கெடுக்க மறுதலித்துள்ளன.இதனால் வெறுமனே அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கெடுத்த ஆர்ப்பாட்டமாகவே அது நடந்து முடிந்துள்ளது.

இதனிடையே யூ.எஸ்.கேபிள் நிறுவனத்தின்;; கேபிள்கள் வெட்டி துண்டாடப்பட்டுள்ளதாக அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழில் கேபிள் இணைப்புகளை வழங்கிவரும் யூ.எஸ்.கேபிள் நிறுவனத்தின் கேபிள் இணைப்புக்கள் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் வெட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யூ.எஸ்.கேபிள் நிறுவனத்தின் இயக்குனர் துசியந்தன் (சூட்டி) யினால் அச்சுவேலி காவல்; நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழில் சட்டவிரோத கேபிள் இணைப்புகளை வழங்கும் நிறுவனங்கள் மீது இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவினால் யாழ் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் விரைவில் கால்பதிக்கவுள்ள ஜபிசி தொலைக்காட்சி யூ.எஸ்.கேபிள் நிறுவனத்தினரை பயன்படுத்தி தனது ஒளிபரப்பினை தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு ஜபிசி களமிறங்கினால் தனது கடையை மூடவேண்டிவராலாமென டாண் அஞ்சகின்றது.


இதன் எதிரொலியே யூ.எஸ்.கேபிள் நிறுவனத்தினரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் நகர்வுகள் என சொல்லப்படுகின்றது.

No comments