சரக்குக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் விபத்து - 11 பேர் மீட்பு

கொழும்புத் துறைமுகத்தின் 11.6 ஆவது மைல் தொலைவில் உள்ள கடல் பிரதேசத்தில் இன்று (26) அதிகாலை விபத்துக்குள்ளான ´முதா பயனியர்´ எனும் வணிக கப்பலில் மூழ்கிவரும் நிலையில் கப்பலில் இருந்த கப்டன் உட்பட 11 பேர் பாதுகாப்பான முறையில் காப்பற்றப்பட்டுள்ளனர்.

இவர்களை சிறிலங்கா மேற்கு கடற்படைக்கு சொந்தமான அதிவேக தாக்குதல் படகின் குழுவினர் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொமினிக் குடியரசிற்கு சொந்தமான குறித்த வணிகக் கப்பல் கப்டனின் கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கமாக சரிந்துள்ளதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் உடனடியாக செயற்பட்ட கடற்படையினர் குறித்த கப்பலை நோக்கி வேக தாக்குதல் படகுகள் இரண்டை அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் வேக தாக்குதல் படகுகளின் மூலம் கப்பலில் இருந்தவர்களை பாதுகாப்பான முறையில் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் 10 சிறிலங்காவைத் சேர்ந்தவர்களும் ஒரு இந்தோனேசிய நாட்டவரும் இருந்ததுடன் கப்பலின் கப்டனாக சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவரே கடமையாற்றியுள்ளார்.

இதேவேளை குறித்த கப்பலின் உரிமையாளர் இந்தியர் ஒருவர் என்பதுடன் காப்பற்றப்பட்டவர்களை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments