முள்ளிவாய்க்காலை நினைவுகூர்ந்த சயந்தன்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது கடந்த ஆண்டில் கூட்டமைப்பின் தலைவரை கேள்வி கேட்ட ஊடகவியலாளரை நினைவு கூர்ந்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன்.

இன்று வியாழக்கிழமை வடமாகாணசபை அமர்வினில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தான் வழங்கிய பணத்தை மீளக்கேட்ட எதிர்கட்சி தலைவர் சி.தவராசா விவகாரம் பேசுபொருளாகியிருந்தது.

அப்பொழுதே கடந்த ஆண்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது கூட்டமைப்பின் தலைவரை கேள்வி கேட்ட ஊடகவியலாளரை நினைவு கூர்ந்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன்.

குறித்த ஊடகவியலாளர் தற்போது முதலமைச்சர் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவருவதாக புதிய தகவலை வெளியிட்ட அவர் இது தொடர்பில் ஆராயவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன் அவர் முதலமைச்சர் அமைச்சினில் பணியாற்றுவதாகவும் தெரிவித்த போது அதனை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மறுதலித்திருந்தார்.

இதனிடையே குறித்த ஊடகவியலாளர் முதலமைச்சர் வீட்டிற்கு அடிக்கடி செல்வதாக கேசவன் சயந்தன் தெரிவித்த போது முதலமைச்சரோ அருகாக இருந்த தனது மற்றொரு அமைச்சரிடம் யாரை பற்றி பேசுகின்றாரென வியப்புடன் கேட்டிருந்ததாக குறித்த அமைச்சர் ஊடகவியலாளர்களிடையே பகிர்ந்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது இம்முறையும் சுடரேற்றும் பகுதியிலிருந்து மாணவர்களால் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments