உலகிலேயே வயதானவர் மலேசியா பிரதமராகத் தேர்வு!

மலேசியாவில் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. 222 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில், 112 இடங்களில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. சுதந்திரமடைந்து 61 ஆண்டுகளுக்கு பின், மலேசியாவில் முதன்முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

92 வயது நிரம்பிய மகாதிர்  முகமது பிரதமராக பதவியேற்க உள்ளார். இதன்முலம் உலகிலேயே மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.

No comments