நினைவேந்தல் விவகாரம்: முன்னாள் போராளியை விசாரணைக்கு அழைத்தது பிரதமருக்கு தெரியாதாம்!


 முன்னாள் போராளியும் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான க.ஜெயக்குமார், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஒழு்கமைப்புப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பயங்கரவாத விசாரணைப் பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட விடயம் தமக்கு தெரியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். அத்துடன், இந்த விவகாரத்தை பொலிஸ் மா அதிபரிடம் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். முன்னாள் போராளியும் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான க.ஜெயக்குமார், கிளிநொச்சியில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கடந்த மே 18ஆம் திகதி தலைமைதாங்கிய நடத்திய குற்றச்சாட்டில் இன்று (28) கொழும்பு நான்காம் மாடிக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் இந்த விடயத்தை இந்த விடயம் தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இந்த விடயத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். “போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவேந்துவதற்கு உள்ள உரிமையை அரசும் ஏனைய அரசியல் கட்சிகளும் ஏற்றிருந்தன. நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்த்து. இந்த நிலையில் முன்னாள் போராளியும் எமது கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டவருமான வேந்தன் உள்ளிட்ட மூவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பிரதமரிடம் தெரிவித்தார். “இந்த விடயம் பற்றி எனக்கு தெரியாது. அது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கின்றேன்” என்று பதிலளித்தார் பிரதமர்.

No comments