அரச மருத்துவர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்


திட்டமிட்டவாறு இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்தார்.

சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இன்று காலை 8 மணி தொடக்கம் நாடளாவிய ரீதியாக இந்த அடையான பணிப்புறக்கணிப்பு இடம்பெறும்.

இந்த பணிப்புறக்கணிப்பின் போது சகல மருத்துவமனைகளிலும் அவரச சிகிச்சை பிரிவு செயற்படும், அத்துடன், சிறுவர், தாய்சேய் மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் மருந்துவமனைகள் என்பனவற்றின் செயற்பாடுகள் தடையின்றி இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் கிஷாந்த தசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்

No comments