அரசிற்கெதிராக யாழில் பங்காளிகள் போர் குரல்!

தனது நிறுவன பணியாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜனாதிபதி மைத்திரிபாலவின் இணைப்பு செயலாளரும் டாண் குழும உரிமையாளருமான அரசிற்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளார்.

ஊடகவியலாளர்களது போராட்டமென அறிவிக்கப்பட்டபோதும் அது கட்சிகளதும் அரசியல் தலைவர்கள் மற்றும் மாகாணசபையினரது போராட்டமாக அமைந்திருந்தது.

டாண் குழுமத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள காலைக்கதிர் பத்திரிகையின் பணியாளரொருவர் தாக்கப்பட்டுள்ளார்.கேபிள் இணைப்பு தொடர்பான கொடுக்கல் வாங்கலிலேயே தாக்குதல் நடந்ததாக சொல்லப்படுகின்றது.


தற்போது டாண் மற்றும் மற்றொரு கேபிள் இணைப்பு நிறுவனங்களிடையே மூண்டுள்ள மோதலில் இத்தாக்குதல் நடந்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையினில் துணிச்சலாக முன்வந்து முன்னாள் பாதுகாப்பமைச்சின் செயலாளரான கோத்தபாயவின் சகாவும் தற்போதைய  ஜனாதிபதி மைத்திரிபாலவின் இணைப்பு செயலாளருமான குகநாதன் போராட்டகளம் புகுந்துள்ளார்.


இப்போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ,ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி,தமிழரசுக்கட்சி மற்றும் மறவன்புலோ சச்சிதானந்தன் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து பங்கெடுத்திருந்தனர்.

இதனிடையே ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கொழும்பில் உள்ள இலங்கை காவல்துறை தலைமையகத்தின் 4 ஆம் மாடியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (26) தொடர்ச்சியாக 5 மணி நேரம் குறித்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

No comments