லண்டனில் நடைபெற்ற சுபவீ அவர்களின் அரசியல் அறம் சொற்பொழிவு!


“லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்” தோழர்கள் ஒருங்கிணைப்பில் பேராசிரியர் சுபவீ அவர்களின் 'அரசியல் அறம்' சொற்பொழிவு சனிக்கிழமை(12 May 2018) அன்று லண்டனில் நடந்தது.
ஒன்று கூடலின் தொடக்கத்தில், தமிழ் ஈழத்தில் தங்கள் இன்னுயிரை கொடையாக ஈகிய களப் போராளிகளுக்கும், இனப்படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நோக்கில் பேராசிரியர் சுபவீ மெழுகுவர்த்தி ஏற்றிவைக்க, வீர முழக்கங்கள் முழங்க, அகவணக்கம் செலுத்தப்பட்டது.
வரவேற்புரை முடிந்தவுடன் பேராசிரியரின் 'அரசியல் அறம்' சொற்பொழிவு தொடங்கி விட்டது. கடுகு விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு ஒன்றே கால் மணி நேரம் அமைதியாக இருந்து மக்கள் சொற்பொழிவை கேட்டனர். பேராசிரியர் சுபவீயின் சொற்பொழிவு முடிந்தவுடன், கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

பிறகு பேராசிரியருடன் கேள்வி நேரம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

பேராசிரியர் சுபவீக்கு தோழர்கள் ஏராளமான புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள். பேராசிரியர் சுபவீ, அனைத்து தோழர்களுக்கும் அறிவின் குறியீடாக பேணா ஒன்றை பரிசளித்தார். நன்றியுரையுடன் ஒன்று கூடல் இனிதே முடிந்தது.
நேற்றைய ஒன்று கூடலில், வந்திருந்த பொதுமக்களிடம், மக்களின் மனோ நிலையை அறிந்து கொள்ளை, அவர்களின் சமூக அரசியல் புரிதலை புரிந்து கொள்ள, அறிவியல் மனப்பான்மையுடன் தயாரிக்கப்பட்ட வினா வங்கியை( Questionnaire) கொடுத்து பெற்றுக் கொண்டனர்.
பொது மக்களுக்கு, பார்ப்பனீய சமஸ்கிருத கலாச்சாரம் தமிழ் மக்களை எப்படி அழிக்கிறது இழிவு படுத்துகிறது எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த, பிறப்பு முதல் இறப்பு வரை எங்கெங்கே? எப்படி? இழிவு செய்கிறது சமஸ்கிருத கலாச்சாரம், என்பதை விளக்கும் வகையில், சமஸ்கிருத ஸ்லோகங்கள் துண்டறிக்கையாக வினியோகிக்கப்பட்டது.






No comments