சிங்கப்பூர் விலைச் சூத்திரத்திற்கு ஏற்பவே இலங்கையிலும் எரிபொருள் விலை அதிகரிப்பு


உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகவே எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விலைகள் இரண்டு மாதங்களுக்கொருமுறை மீளாய்வு செய்யப்பட்டு அதன் பிரகாரம் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமெனவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் எரிபொருள் விலைச் சூத்திரத்தைப் பயன்படுத்தி எரிபொருள் விலைகள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும். உலகச் சந்தை விலைகளுக்கேற்ப விலைகளில் அதிகரிப்பு அல்லது வீழ்ச்சி காணப்படவே செய்யும். விலை வீழ்ச்சி ஏற்படுமாயின் விலைச் சூத்திரத்தில் அதன் பிரதிபலிப்பு தென்படும். அடுத்த வருட முதல் காலாண்டுப் பகுதியில் எரிபொருள் விலைகளில் வீழ்ச்சி ஏற்படவுள்ளது. அதன்படி விலைகளில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்தை அமைச்சரவை அங்கீகரித்ததைத் தொடர்ந்தே அரசாங்கம் அதனை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments