வெனிசுவலா நடைபெற்ற அதிபர் தேர்தலில் மதுரோ வெற்றி

வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தில்லுமுல்லுகள் முறைகேடுகள் நடந்ததாக கூறி முக்கிய எதிர்கட்சி தேர்தலை புறக்கணித்தது.

இதையடுத்து, நேற்று பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் 46.1 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் அதிபர் மதுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் மீண்டும் மதுரோ வெற்றி பெற்றதையடுத்து அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்து அவரது வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.

No comments