ஊழலும்,பாலியல் துஸ்பிரயோமுமே தகுதிகளா?


யாழ்.பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்பட்ட அநீதிகளை, திருட்டுக்களை,ஊழல்களை,பாலியல் துஷ்பிரயோகங்களை,முறையற்ற ஆட்சேர்ப்புக்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த மூத்த கல்வியாளர்கள் பேரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளமைக்கு ஊழியர் சங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.


2015இல் சிறந்ததொரு பல்கலைக்கழகப் பேரவையின் உருவாக்கத்துக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கமும்  தனது கணிசமான பங்களிப்பை நல்கியிருந்தது. அது ஆட்சி மாற்றம் ஏற்பட்டகாலம். நல்லாட்சி என்று கூறி பதவிக்கு வந்த அரசாங்கத்தின் மிக ஆரம்பகாலம். ஆனால் குறித்தபேரவையின் 3 ஆண்டு கால பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய பேரவை உறுப்பினர்கள் பல்கலைக்கழகமானிய ஆணைக்குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பினர் தமது சிபாரிசுகளை தெரியப்படுத்தியிருந்த நிலையில் கடந்த காலத்தில் எமது பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பல அநீதிகளை,திருட்டுக்களை,ஊழல்களை,பாலியல் துஷ்பிரயோகங்களை,முறையற்ற ஆட்சேர்ப்புக்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த மூத்த கல்வியாளர்கள் பேரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் பல்கலைக்கழகத்தின் சுமூகசெயற்பாட்டிற்கு இடையூறாகஉள்ளனர் எனவும் கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் சுமூகசெயற்பாடு என்றால் என்ன என நாங்கள் வினவ விரும்புகிறோம். பல்கலைக்கழக சொத்துக்களை சூறையாடுவதும், பல்கலைக்கழக மாணவிகளை துஷ்பிரயோகம் செய்வதும் தான் சுமூக செயற்பாடு என எமது பல்கலைக்கழக நிர்வாகிகளும்,பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் கருதுகிறதாவெனவும் தமது மேதின எழுச்சி நிகழ்வில் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments