புலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்!


ஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில் கடைவிரிக்க தொடங்கியுள்ளனர்.

அவ்வகையில் ஜெர்மனியின் வடமேற்கு “றைன்“ நதித்தீரத்திலுடள்ள “நொயிஸ்“எனும் நகரத்தில் புத்தகஅறிமுகவிழா ஒன்று நடாத்தியுள்ளனர். 
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் அணி தற்போது இந்திய இலங்கை அரசுகளது விருப்பத்தின் பேரில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என புனர்வாழ்வு பெற்றுள்ளது.

இந்த அமைப்பின் தலைவரும் செயற்பாட்டாளருமாகத் தொழிற்படுபவரான சுகு என அறியப்பட்ட திருநாவுக்கரசு சிறீதரன் அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பு நூலே வெளியிடப்பட்டுள்ளது.

இது ஏறத்தாழ 1986–2016வரையான30 ஆண்டுகால ஆக்கங்களின் தொகுப்பாக இலங்கையில் வெளியிடப்பட்டு பிறநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுவருகின்றது.

நூல் விமர்சனத்துக்காக இந்திய சட்டத்தரணி திரு இளங்கோவன் கன்னியப்பன், ஒல்லாந்திலிருந்து பாலசூரியன், ஜெர்மனியிலியிருந்து தமிழ்க்குமரன் உட்பட இருவர் என நால்வர் அழைக்கப்பட்டிருந்தனர்.

சிறீதரனின் மனிதாபிமானமிக்க இளைஞர்களுக்கான இக்கட்டுரை எனும் நூல் வெளியீட்டு நிகழ்வின் பின்னணியில் தனியார் தொலைக்காட்சி உரிமையாளரும் ,மைத்திரியின் தற்போதை இணைப்பாளரும் கோத்தபாயவின் பினாமியுமான நபரே இருந்துள்ளார்.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை உடைக்க இலங்கை அரசு பலவழிகளிலும் முற்பட்டுவருகின்ற நிலையில் அதனது முகவர்கள் தற்போது புலம்பெயர் தேச பிரச்சாரங்களிற்கு உள்ளுர் ஆட்களை இழுத்து சென்றுவருகின்றனர்.

உள்ளுரில் தனது தொலைக்காட்சி வழியே இந்திய இலங்கை அரசுகளது விருப்பத்தின் பேரில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியென புனர்வாழ்வு பெற்றுள்ள பத்மநாபா அணியினை முன்னிறுத்த இந்நபர் பாடுபட்டுவந்த போதும் அது வெற்றிபெற்றிருக்கவில்லை.

குறிப்பாக உள்ளுராட்சி சபை தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ள முற்பட்ட தரப்புக்கள் தோல்வியினையே சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments