இனவழிப்பின் உச்ச நாட்களில் கிளிநொச்சியில் துடுப்பாட்ட போட்டி?


2009ம் ஆண்டு மே மாதம் 1 ஆம் நாட்களிலில் இருந்து 18 வரை தமிழினம் கொத்துக்கொத்தாக சிறியவர், பெரியர் என்கின்ற வயது வேறுபாடின்றி கொத்துக்கொத்தாக கொலை செய்யப்பட்டது உலகறிந்த விடயம். ஆனால் இந்த நாட்களில் அதே வன்னிமண்ணில் ஒரு மாவீரனின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட துடுப்பாட்ட போட்டி இந்த முள்ளிவாய்க்கால் துயர்முகுந்த நாட்களில் சிங்கககொடியேற்றப்பட்டு வெகுவிமர்சையாக கொண்டாடப்படஇருக்கிறது. 2009 ம் ஆண்டுக்கு முன்னர் அனைத்துலக தொடர்பக துணைபொறுப்பாளர் லெப் கேணல் கலையழகன் அவர்கள் நினைவாக ஒவொரு ஆண்டும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி மற்றும் கிளிநொச்சி ஆகிய அணிகள் பங்குபற்றும் வன்னியின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டி இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. 2009 கு பின்னர் இப்போட்டியை நடத்துவதில் இரண்டு பாடசாலைகளும் ஆர்வம் காட்டியதால் ஒரு நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றது . வழமையாக இப் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்று வரும் ஆனால் இம் முறை சிங்களம் எம்மை துவம்சம் செய்த இனவழிப்பின் உச்ச நாட்களில் நடைபெற தீர்மாணிக்கபட் டுள்ளது. குறித்த போட்டி ஒரு மாவீரனின் நினைவாக உருவாகி இப் போட்டியில் முன்னர் விளையாடிய வீரர்கள் பலர் காணாமல் போயும், மாவிரர்களாகியும் உள்ளார்கள் இவர்களை கூட மதிக்காமல் சிங்கள தின் நிகழ்ச்சி நிரலுக்குள் இரண்டு பாடசாலைகளும் அடிமையாகி இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த இரன்டு பாடசாலைகளும் மே 12 இப் போட்டியை நடத்துவோம் என விடாப்பிடியாக உள்ளமை மன வேதனை அளிக்கிறது. தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை என்கின்ற துயர்வரலாற்றினையே அடுத்த சந்ததிக்கு கடத்தாமல் விளையாட்டுக்கொண்டாத்துக்கு தயாரகிக்கொண்டிருக்கிறது வன்னிமண். இது யாருடைய நிகழ்ச்சி நிரல் அந்த மாவீரனுக்கு இவர்கள் செய்யும் மரியாதை இதுவோ.. என முன்னாள் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

No comments