ரணிலின் நாடகங்கள் யாழ்ப்பாண மேடைகளில்?


இலங்கைப்பிரதமர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வேளை அவர் தங்கியிருந்த விடுதி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டமை காலைக்கதிர் பத்திரிகை பணியாளர் தாக்கப்பட்டமை என்பவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட நாடகங்களென தகவல்கள் வெளிவந்துள்ளது.தெற்கில் தனக்கான ஆதரவு புலத்தை தோற்றுவிக்க ஒருபுறம் இரவு விருந்துக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் தங்கியிருந்த விடுதி மீது கல்வீசப்பட்டதாக சம்பவமொன்றை தோற்றுவித்துள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள குறித்த விடுதி நேற்று காலை முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காவல்துறையினதும் விசேட அதிரடிப்படையினதும் பிரதமரது பாதுகாப்பு பிரிவினதும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.

பிரதான நுழைவாயில்கள் எங்கும் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுமிருந்தது.மாவட்ட செயலகத்தில் பிரதமர் கூட்டத்தில் பங்குபற்றி விடுதி திரும்பும் வரை வைத்தியசாலை வீதி முழத்துக்கொரு காவல்துறையினரால் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டிருந்தது.

முற்றாக விடுதியை சூழ பாதுகாப்பு மூன்றடுக்கில் பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் வெளிப்புறத்தில் இருந்து கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதென்பதை ஏற்கமுடியாது சிலவேளை உள்ளிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாயின் அது காவல்துறைக்கு தெரியாதிருக்காதென விடுதி நிர்வாகம் தெரிவிக்கின்றது.


இந்தச் சம்பவம் இன்று நேற்றிரவு 9.45 மணியளவில் மின்தடைப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. எனினும் விடுதி மீது எந்த கல்வீச்சுத் தாக்குதலும் இடம்பெறவில்லை என நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.  

விடுதியில் வெளிப்புறத்தில் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் வீதிப் பகுதியிலிருந்து கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல் வீச்சை மேற்கொண்டோர் தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆனால் குறித்த வீதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டினிலேயே இருந்துள்ளது.

இதனிடையே காலைக்கதிர் பணியாளர் தாக்கப்பட்டமைக்கும் பின்னணி பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.

தூக்குதலாளிகள் வாளின் பின்புறத்தாலேயே வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதன் மூலம் அவர்கள் குறித்த பணியாளரை கொலை செய்ய முற்பட்டதாக தெரியவில்லை.தமிழ் ஊடகங்களிற்கு கடந்த கால இருண்ட யுகம் பற்றி செய்தியொன்றை கசியவிடவே முற்பட்டுள்ளமை அதுவும் ரணில் யாழப்பாணத்தில் தங்கியிருந்த வேளை விடுக்கப்பட்டமை பின்னணியை தௌ;வுபடுத்தியுள்ளது. 

அண்மைக்காலமாக இலங்கை ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர்களது வடக்கு வருகை தொடர்பில் சாதாரண மக்கள் அலட்டிக்கொள்வதில்லை.இதனால் தனது விஜயத்தின் கவனத்தை ஈர்க்க நல்லூரில் குளிர்களி அருந்த சென்ற ரணில்,செல்பி எடுக்க முன்வந்த ரணிலென பல செய்திக்கதைகள் கசியவிடப்பட்டுள்ளன.

No comments