முடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்! மாணவர்களது வழிநடத்தலில் நினைவேந்தல்!

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­ன­ருக்­கும் இடையே முரண்­பா­டு­கள் நீடித்து வந்­தி­ருந்த நிலை­யில் அது முடி­வுக்கு வந்­துள்­ளது. யாழ்ப்­பாணப் பல்க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் கோரிக்­கை­க­ளுக்கு, வடக்கு மாகாண சபை வளைந்து கொடுத்­துள்­ளது.
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை, யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் பிர­தி­நி­தி­கள், சிவில் சமூ­கப் பிர­தி­கள் உள்­ள­டங்­க­லான குழு­வி­னர் நேற்­று­முன்­தி­னம் திங்­கட் கிழமை மாலை சந்­தித்­த­னர்.
இந்­தச் சந்­திப்­பில் மாண­வர்­க­ளின் கோரிக்­கை­க­ளுக்கு, முத­ல­மைச்­சர் இணக்­கம் தெரி­வித்­தார். யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் தயா­ரித்­தி­ருந்த நிகழ்சி நிர­லின் ஒழுங்­குக்கு அமை­வாக, நிகழ்­வு­களை முன்­னெ­டுக்க முத­ல­மைச்­சர் சந்­திப்­பில் இணங்­கி­யி­ருந்­தார்.
இன்று புதன் கிழ­மையே, முள்­ளி­வாய்க்­கால் ஏற்­பாட்­டுக்­குழு முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் சந்­திப்பு நடத்­தும் என்­றி­ருந்த நிலை­யில், மாண­வர்­க­ளு­டன் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­ட­தும் நேற்­றுக் கூட்­டத்­துக்கு முத­ல­மைச்­சர் அழைப்பு விடுத்­துள்­ளார்.
யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் சார்­பில் 3 பேரும், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் முன்­னாள் போரா­ளி­யான பசீர் காக்­கா­வும் கலந்து கொண்­ட­னர். மாண­வர்­க­ளு­டன் கடந்த சனிக்­கி­ழமை பங்­கேற்ற பொது­அ­மைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் எவ­ரும் நேற்­றுச் சந்­திப்­பில் பங்­கேற்­க­வில்லை.
முத­ல­மைச்­சர் முன்­னரே எழு­தி­வந்த, நிகழ்வு ஒழுங்கை வாசித்­தார். அனை­வ­ரும் ஏற்­றுக் கொண்­ட­னர்.
இதே­வேளை சுட­ரேற்­றல் காலை 10 மணிக்கு இடம்­பெ­ற­வேண்­டும் என்று வடக்கு மாகாண சபை தீர்­மா­னித்­தி­ருந்­தது. பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் மதி­யம் 12.30 மணிக்கே இடம்­பெ­ற­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­னர். இந்த நிலை­யில் தற்­போது 11 மணிக்கு சுட­ரேற்­றல் மாற்­றப்­பட்­டுள்­ளது.
வடக்கு – கிழக்­கின் எட்டு மாவட்­டங்­க­ளை­யும், ஏனைய மாவட்­டங்­கள் எல்­லா­வற்­றை­யும் சேர்த்து ஒன்­றா­க­வும், மொத்­த­மாக 9 சுடர்­கள் ஏற்­று­வது என்­றும், அவை அந்­தந்த மாவட்­டங்­க­ளைப் பிர­தி­நித்­து­வப்­ப­டும் பாதிக்­கப்­பட்ட ஒரு­வர் ஏற்­று­வார் என்­றும் வடக்கு மாகா­ண­ச­பை­யின் நினை­வேந்­தல் குழு முடி­வெ­டுத்­தி­ருந்­தது.
இதற்­குப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் ஆட்­சே­பம் தெரி­வித்­துள்­ள­னர்.
சரி­யான ஒரு­வரை எல்லா மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் தெரி­வது கடி­னம் என்­றும் ஒரே­யொரு முதன்­மைச் சுடரை ஏற்­று­வ­து­தான் சரி­யா­னது என்­றும் கூறி­யுள்­ள­னர். இதனை வடக்கு மாகாண சபை நினை­வேந்­தல் ஏற்­பாட்­டுக்­குழு ஏற்­றுக் கொண்­டுள்­ளது.
போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களே சுட­ரேற்­று­வர் என்று முன்­னர் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும், தற்­போது முத­ல­மைச்­சர் சுடரை ஏற்றி, பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரி­டம் கைய­ளிக்க அவர் ஏற்­று­வார் என்று மாற்­றப்­பட்­டுள்­ளது.

No comments