பேரவையிலும் அரைக்கம்பத்திலேயே மாகாணசபை கொடி:சீ.வீ.கே


வடமாகாணசபையின் பேரவை செயலகத்தில் அலுவலக நேரமான காலை 8.30 முதல் மாகாணசபை கொடி அரைக்கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்ததாக அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அலுவலக நேரம் காலை 08.30 இற்கேயென்ற வகையில் கடமைக்கு சமூகமளித்த உத்தியோகத்தர்களால் 08.20 இற்கு கொடியை இறக்கிவிட்டார்கள். அதற்கு முதல் 08.10 மணிற்கு முதல் ஊடகவியலாளர்கள் சிலர் வெளியில் நின்று புகைப்படம் எடுத்தமையால் தவறான செய்தி மக்களிடம் சென்றிருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்திருந்தார்.

வுடமாகாணசபை மே 18 இனை தேசிய இனஅழிப்பு நாளாக பிரகடனப்படுத்தி துக்கதினமாக முன்னெடுக்கவும் கோரியிருந்தன.அத்துடன் பாடசாலைகள்,வடமாகாண அரச திணைக்களங்கள்,அமைச்சுக்களில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் கோரப்பட்டிருந்தது.


அவ்வாறு பணிப்புக்களை விடுத்துவிட்டு வடமாகாணசபை தனது தலைமையகத்தில் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடாதமையை சுட்டிக்காட்டவே செய்தி இணையங்களில் வெளியிடப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

No comments