அமெரிக்க வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் விரட்டியப்பு!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்கு உட்பட்ட வான் எல்லைக்குள் நுழைந்த ரஷிய போர் விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் வழிமறித்து விரட்டியடித்தன. வடக்கு அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாநிலத்துக்கு உட்பட்ட சர்வதேச வான் எல்லைக்குள் ரஷிய விமானப்படைக்கு சொந்தமான இரு Tu-95 "Bear" ரக விமானங்கள் நேற்று காலை அத்துமீறி நுழைந்ததாகவும், அமெரிக்க போர் விமானங்கள் வழிமறித்து விரட்டியடித்ததாகவும் வட அமெரிக்கா பகுதிக்கான விமானப்படை தளபதி மேஜர் ஆன்டுரு ஹென்னஸி இன்று குறிப்பிட்டுள்ளார்.

No comments