கடற்படையால் கொல்லப்பட்டவர்களிற்கு ஈபிடிபி அஞ்சலி!


கொலைப்பங்காளிகள் படுகொலையானவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் நாடகங்கள் அரங்கேற்றப்படுவது வடகிழக்கில் சாதாரணமாகிவருகின்ற நிலையில் இலங்கை கடற்படை படுகொலையை ஈபிடிபி நினைவுகூர்ந்துள்ளது.நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத்தூபிக்கு ஈபிடிபி கட்சி அஞ்சலி செலுத்தி பாவ விமோசனம் பெறமுற்பட்டுள்ளது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து  64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது. படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இதனை நினைவு கூரும் முகமாக நெடுந்தீவு பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் முரளி என்பவர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை 1990ம் ஆண்டின் பின்னர் இதே கடற்படையுடன் இணைந்து தமிழ் இளைஞர் யுவதிகளை தீவகத்தில் ஈபிடிபி வேட்டையாடியிருந்தது.பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் இக்கூட்டினால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுமிருந்தனர்.

No comments