திங்கள் மதியம் வரை காலக்கெடு!


வடமராட்சி கிழக்கு தாளையடி,மருதங்கேணி மற்றும் செம்பியன்பற்று பகுதிகளில் தரையிறங்கியுள்ள தென்னிலங்கை மீனவர்களை அங்கிருந்து வெளியேற உள்ளுர் மீனவர்கள் நாளை திங்கட்கிழமை வரை கால அவகாசம் வழங்கியுள்ளனர். 

வடமராட்சி கிழக்கின் கரையோரங்களில் அட்டை பிடிக்கும் வெளி மாவட்ட மீனவர்களின் அத்து மீறல் மற்றும் நூற்றுக்கணக்கான வாடிகள் அமைத்து தங்கு தொழிலை மேற்க்கொள்வதை எதிர்த்து இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டண ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற கண்டண ஆர்ப்பாட்டத்தில் குறித்த வாடிகளை முற்றுகையிட்ட வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இங்கு வந்து அட்டைத் தொழிலை மேற்கொள்வதால் எமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சிறு தொழில் முதல் கரைவலைத் தொழில்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டியிருந்தனர்.

முழு வாடிகளுக்கும் சென்று தமது நிலைப்பாட்டினை விளக்கியதுடன் நாளை மதியத்தினுள் அங்கிருந்து வெளியேறுமான காலக்கெடுவொன்றையும் அவர்கள் விதித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதி முழுமையாக கடல் அட்டை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ள பகுதியென்பது குறிப்பிடத்தக்கது.


No comments