பாலாவியிலும் நில ஆக்கிரமிப்பு!


இந்துக்களது புனித பூமியான திருகேதீச்சர ஆலயத்தின் தீர்த்தக்கேணி அமைந்துள்ள பாலாவி பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் இந்துக்கள் அல்லாதோருக்கு வீடமைப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

அப்பகுதி பிரதேச செயலர் குறித்த ஆலயக்காணியை தன்னிச்சையாக இந்துக்கள் அல்லாத குடும்பங்களிற்கு பகிர்ந்தளித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த ஆலய காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் கோரியுள்ளார். இதனிடையே இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மடு திருத்தல பகுதியில் யாத்திரிகர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடல் இன்று புதன் கிழமை மடு திருத்தலத்தில் இடம்பெற்றுள்ளது.

மடு திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய அராசங்கம் வழங்கும் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாத்திரிகர்களுக்கான 300 தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.


வீட்டு திட்டம் அமைக்கும் பணிகளை விரைந்து ஆரம்பிக்கும் வகையில் எதிர் வரும் யூன் மாதம் 1 ஆம் திகதி அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது. 

No comments