இந்து ஆலயங்களை கட்டித்தரப்போகின்றதாம் இலங்கை இராணுவம்!


யாழ். மாவட்டத்தில்,கட்டட ஒப்பந்தங்காரர்களாக செயற்பட தொடங்கியிருக்கின்ற இலங்கை படையினர் அடுத்து ஆலய கட்டுமானப்பணிகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனனர்.
அண்மையில் சுகாதார அமைச்சின் மூன்று பாரிய ஒப்பந்த வேலைகளை பொறுப்பேற்று படைத்தரப்பு கட்டுமானப்பணிகளை மேற்கொண்டிருந்தது.அதனை தொடர்ந்து வீடமைப்பு பணிகளிலும் அது தற்போது மும்முரமாக ஈடுபட்டுவருகின்றது.

இந்நிலையில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், குறிப்பாக கடந்த மூன்று வருடகாலப் பகுதியில், இராணுவத்தினரின் நடவடிக்கைகளால், பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ கோவில்கள் ஏதேனும் சேதமடைந்திருந்தால், அவற்றை இராணுவத்தின் முழுமையான செலவில் புனரமைத்துத் தருவதாக, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாரச்சி என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ். மாவட்டத்தில், போதிய வசதியற்ற மற்றும் வருமானம் குறைந்த கோவில்களின் புனர்நிர்மாண வேலைதிட்டத்தின் கீழ், மணல் மற்றும் சீமெந்து உதவிகோரிய ஆலயங்களுக்கு, அடுத்த வாரம் முதல் அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பெருமளவிலான ஆலயங்கள் யுத்த முடிவின் பின்னராக படையினரால் சத்தம் சந்தடியின்றி இடித்தழிக்கப்பட்டமை தெரிந்ததே.


No comments