முள்ளிவாய்க்காலிற்கு பின்னடித்த சுமந்திரனின் எடுபிடிகள்?



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்கவேண்டாமென யாழ்ப்பாணத்திலுள்ள சில உள்ளுராட்சி மன்ற தலைவர்களிற்கு கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வழமையாக ஆட்சிக்கதிரையேறு முன்னராக பெரும்பாலான தவிசாளர்கள் முள்ளிவாய்க்காலிற்கு படையெடுத்துவருவதும் புகைப்பட காட்சிகளில் பங்கெடுப்பதும் வழமையாகும்.

ஆயினும் இம்முறை சுமந்திரன் ஆதரவில் ஆட்சிபீடமேறிய தவிசாளர்கள் பலரும் முள்ளிவாய்க்கால் பக்கம் ஆட்சிக்கதிரையேறிய பின்னர் எட்டிக்கூட பார்த்திருக்கவில்லை.

ஆட்சிக்கதிரையேற முள்ளிவாய்க்கால் தேவைப்பாடாக இருந்த அரசியல்வாதிகளிற்கு பின்னராக மக்களோடு மக்களாக வருகை தந்து அஞ்சலி செலுத்த தயாராக இல்லை.

கணிசமான உள்ளுராட்சி தவிசாளர்கள் அடுத்துவரும் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு பதவியுயர்வு பெறவிரும்புகின்றனர்.இதனால் தொடர்ந்தும் சுமந்திரனின் கடைக்கண் பார்வை அவர்களிற்கு தேவையாக உள்ளது.

குறிப்பாக நெல்லியடி பிரதேசசபை தலைவர் உள்ளிட்ட மாகாணசபை தேர்தலிற்காக இடம்பார்த்திருக்கின்ற பலரும் முள்ளிவாய்க்காலிற்கு செல்லவில்லையெனவும் சுமந்திரனே தம்மை செல்லவேண்டாமென தடுத்ததாவும் கூறியுள்ளனர்.  

No comments