மண் சரிவு எச்சரிக்கை தொடர்ந்து: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வு


நாட்டில் நிலவும் முகில் செரிந்த வானிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இடைக்கிடையில் 40 முதல் 45 கிலோ மீட்டருக்கு இடையில் பலத்த காற்றும் வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மண்சரிவு அபாய எச்சரிக்கை உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனரத்த முகாமைத்துவ நிலையத்தின் பிரிதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி இதனை தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் இடம்பெறும் அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.

இதனுடன் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தப்போவ நீர்தேக்கத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த நபரொருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் ஹொரனை, பொலன்னறுவை, மொனராகலை பகுதிகளிலும் இயற்கை அனர்த்தங்களால் மரணங்கள் சம்பவித்துள்ளன.

No comments