தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து இயக்குனர் கவுதமன் புழல் சிறையில் உண்ணாவிரதம்


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து இயக்குனர் கவுதமன் புழல் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து இன்று தமிழகம் புதுச்சேரியில் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், சங்கங்கள் சார்பாக ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி நடைபெற்ற மக்கள் எழுச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து இயக்குனர் கவுதமன் புழல் சிறையில் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். ஸ்டெர்லைட் ஆடையை மூட வேண்டும், பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும், துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது அனைத்து கோரிக்கைகள் நிறைவேறும்வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இயக்குனர் கவுதமனின் உண்ணாவித போராட்டத்தில் புழல் சிறையிலுள்ள மக்கள் அதிகார அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். புழல் சிறையிலுள்ள இயக்குனர் கவுதமன் உள்பட 41 பேர் தற்போது உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

No comments