விலை உயர்வும் வரிச் சுமையும் உழைக்கும் மக்களின் தலைகளிலா” - யாழில் ஆர்ப்பாட்டம்.

அரசாங்கத்தின் தொடர்ச்சியான மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று முற்பகல் 10 மணிக்கு போராட்டம் நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் நடத்தப்பட இப் போராட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க மட்டுமல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டது.

நேற்று முற்பகல் 10 மணியளவில் யாழ்.பஸ் நிலையம் முன்பாக ஒன்று கூடியவர்கள் “விலை உயர்வும் வரிச் சுமையும் உழைக்கும் மக்களின் தலைகளிலா” என்று தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக பஸ் நிலையம் முன்பாக ஆஸ்பத்திரி வீதியோராமாக நின்று விலை உயர்வினை எதிர்க்கும் வகையில் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.







No comments