பாதுகாப்பு வளையத்தில் தூத்துக்குடி: 5,000 போலீசார் குவிப்பு


ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இன்றும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக போலீசார் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் தூத்துக்குடி நகரம் முழுவதையும் வைத்துள்ளனர். இதற்காக 10 மாவட்டத்தைச் சேர்ந்த, அதாவது தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, சேலம், ஈரோடு போன்ற 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஏடிஎஸ்பி-க்கள், அதேபோன்ற பாதுகாப்பிற்காக காவல்துறையினரும் தூத்துக்குடி நகருக்கு வரவழைக்கப்பட்டனர். அதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூப்பாக்கிச்சூட்டில் ஏற்கனவே நேற்று மாலை வரை 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்தது. பெண்களும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தது என்பது அனைவருக்கும் ஒரு வேதனை அளிக்கும் விஷயமாக தான் பார்க்கப்படுவதாக பொதுமக்கள் அனைவரும் தெரிவித்து வரும் நிலையில், நேற்று கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் கார்த்திக் என்ற மாணவன் இன்று உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று தகவல் வெளியாகியது. இதே நிலையில் காவல்துறையினரும் தனியார் மருத்துவமனையில் அவர்களுக்கான சிகிச்சை என்பது வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய உடல்நிலையும் தற்போது மோசமாகி உள்ளது என்று தான் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் அவர்களுக்கான உயர்தர சிகிச்சை என்பது வழங்கப்பட்டு வருகிறது. இருந்தபோதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை போலீசாரிடம் கேட்டபோது, போராட்டக்காரர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் தான் நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினோம் என்று கூறினாலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று போராட்டக்காரர்கள் அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூடு குறித்து காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்தும், அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தும் எரித்தனர். கண்ணாடிகளை சேதப்படுத்தியதால் போராட்டக்காரர்கள் சட்டவிரோத கும்பல் என அறிவிக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு தகுந்த எச்சரிக்கை விடப்பட்டது. அதன்பின்னரே, கண்ணீர் புகைக்குண்டுகளை உபயோகித்தும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் வேறுவழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. தூத்துக்குடியில் அமைதி நிலவ சட்டம் - ஒழுங்கு கூடுதல் இயக்குனர் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது அமைதியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments