3 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி உதவி வழங்க நடவடிக்கை


குறைந்த வருமானத்தைக் கொண்ட பதினான்கு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் பிரகாரம் இரண்டு தசாப்தங்களுக்குக் கூடுதலான காலமாக சமுர்த்தி உதவி பெறத் தகைமையுடைய மூன்று இலட்சத்து எண்பதாயிரம் குடும்பங்களுக்கு எதிர்காலத்தில் சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கக் கூடிய விதத்தில் உரிய நடைமுறைகளை வகுக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமுர்த்திச் செயற்பாடுகளில் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக சுட்டிக்காட்டி சமுர்த்தி உதவித் திட்டத்தை மறு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments