துப்பாக்கி சூட்டை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்-சென்னையில் 20,000 போலீசார் குவிப்பு

தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடப்பதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனாலும் பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.தமிழக அரசின் இந்த கொடூர செயல் காரணமாக மக்கள் அரசின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். இதனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம், பேருந்து நிறுத்தம் கடைபிடிக்கப்படுதுகிறது. இந்த நிலையில் சென்னையில் முதல்வர் பழனிச்சாமி இல்லத்திற்கு முன் போராட்டம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் இல்லம், துணை முதல்வர் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு. சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் போலீஸ் ரோந்து பணி செய்து வருகிறது.பேருந்து பணிமனைகளில் அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


No comments