இரணைத்தீவு மக்களின் பிரச்சினை குறித்து ஆராய 15 ஆம் திகதி அதிகாரிகள் விஜயம்


இரணைதீவு மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கொண்ட குழு, எதிர்வரும் 15 ஆம் திகதி அப்பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக அரசாங்கம் அறிவிதுள்ளது.

 1992ஆம் ஆண்டு இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், சொந்த இடத்துக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு எந்தவித தடையும் கிடையாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 இரணைதீவில் மீளக்குடியமர்த்துமாறு கோரி போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டிபியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

 பாதுகாப்பு அமைச்சு சார்பில் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக இதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்

No comments