பன்குளம் எல்லைக்காளி கோயில் மீண்டுவருகின்றது!


திருகோணமலையின் தமிழ் மக்களது பூர்வீக மண்ணான பன்குளம் பறையன்குளம் எல்லைக்காளி கோயில் அடிக்கல்நடும் நிகழ்வு கடந்த 18ம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

காலம் காலமாக தமிழ், ஆதி சைவமுறையில் இவ் ஆலயத்தில் பூசைகள் நடைபெற்றது. சாதாரண மக்களுக்கும் புரிந்துகொள்ளக்கூடியதாக இந்த ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்று வந்திருந்தது. 


முன்னவர் கால் நடையாகவும் பின்னவர்கள் மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் மூலமாகவும் இக் கோவிலுக்கு 70 முதல் 80 ம் ஆண்டு காலங்களில் மக்கள் பயணித்து வந்திருந்தனர்.
அக்காலத்தில் பேராசியர் குணசிங்கம் அங்கு அகழ்வாராட்சியில் ஈடுபட்டிருந்ததை ஊர் மக்கள் நினைவு கூர்ந்தனர்.
வரலாற்று தொன்மை மிக்க குறித்த ஆலயம் யுத்த நடவடிக்கை காரணமாக மக்களது வெளியேற்றத்தையடுத்து தீண்டுவாரற்றுப்போயிருந்தது.
தற்போது எல்லைக்காளி கோயில் அடிக்கல்நடும் நிகழ்வு கடந்த 18ம் திகதி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வருகையுடன் நடைபெற்றிருந்தது.

No comments