வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டது இராணுவ கொலனியே!

வலிகாமம் வடக்கில் நேற்று விடுவிக்கப்பட்ட பகுதியில் மூன்றிற்கும் அதிகமான படைத்தளங்கள் பேணப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.இலங்கை இராணுவம் படையினரது ஆக்கிரமிப்புக்கொண்ட இராணுவ கொலனியொன்றையே அங்கு பேண முற்பட்டுள்ளமை பற்றி ஏற்கனவே பதிவு இணையம் செய்தி வெளியிட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

குறிப்பாக அங்குள்ள படைத்தளங்கள் பற்றிய விபரங்களோ அவற்றிற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணியின் அளவு தொடர்பாக கண்டறியப்பட்டிருக்கவில்லை.

இதனிடையே நேற்றைய தினம் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மயிலிட்டி வடக்கில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயம் அப்பகுதி மக்களால் துப்புரவு செய்யப்பட்டுள்ளது. இன்று புத்தாண்டு தினத்தில் அங்கு பொங்கல் செய்து வழிபட்டுமிருந்தனர்.


ஆலயத்தின் முன்பக கூரைகள் சேதமடைந்த நிலையில் மூலஸ்தான சுவர்களில் ஆல மரம் வளர்ந்து சுவர்கள் உடைந்த நிலையில் உள்ளது. அம்மன் சிலை அப்படியே உள்ளது. இவ்வலயம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த போதும் அங்கிருந்த இராணுவத்தினர் அம்மனை வழிபட்டதாகவும். அனுமதி பெற்று முன்னர் தாம் வந்து பொங்கியதாகவும் ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவர் தெரிவித்தார். ஆலயத்தின் கேணியும் பற்றைகள் சூழ்ந்து சேதமடைந்து காணப்படுகிறது.

இப்பிரதேசமக்கள் மட்டுமல்லாது மீன்படி தொழில் செய்பவர்கள் கூட வந்து இந்த அம்மனை வழிபட்டு ஆலமர இலையினை பூசையில் வைத்து கொண்டு செல்வர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.



இவ்வாலயம் அடுத்தகட்டமாக எதிர்வரும்; சித்திரை மாதம் 9 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை 3.30 மணி தொடககம் 4.30 மணிவரையுள்ள சுபதினத்தில் விநாயகப்பெருமான், வசந்தமண்டபம், ராஜகோபுரம் மற்றும் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கும் அடிக்கல் நாட்டும் விழா இடம்பெறவுள்ளதாக மயிலிட்டி அருள்மிகு மயிலிட்டி முனையன் வளவு ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

No comments