வலிகிழக்கில் வருடத்திற்கு ஒருவராம்:தமிழரசு முடிவு!

வலி. கிழக்­குப் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் வேட்பாளர் யார் என்­பது தொடர்­பில் கூட்­ட­மைப்­பில் நிலவி வந்த நீண்ட நாள் சர்ச்­சைக்கு நேற்று இறு­தித் தீர்வு எட்­டப்­பட்­டது. வலி. கிழக்­குப் பிர­தேச சபை­யில் முதல் இரண்டு ஆண்­டு­க­ளும் ரெலோ­வுக்­கும் எஞ்­சிய இரண்டு ஆண்­டு­க­ளும் தமிழ் அர­சுக் கட்­சிக்­கும் எனத் தீர்­மா­னிக்­கப் பட்­டி­ருந்­தது.
இதன் பிர­கா­ரம் வலி. கிழக்­கில் அதிக ஆச­னங்­க­ளைப் பெற்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சியமைக்கும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளது. இருப்பி­னும் தவி­சா­ள­ருக்­கு­ரிய வேட்­பா­ளர் யார் என்பது தொடர்­பில் இழு­பறி நில­வி­யது.
இந்த விட­யத்­துக்­குத் தீர்வு காணும் நோக்­கில் மாட்­டீன் வீதி­யில் உள்ள கட்­சித் தலை­மை­ய­கத்­தில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா தலை­மை­யில் நேற்­றுச் சந்­திப்பு இடம்­பெற்­றது. இதன்­போதே மேற்­படி முடிவு எட்­டப்­பட்­டது.
அதன்­படி ரெலோ சார்­பில் போட்­டி­யிட்ட கொழும்பு மாந­கர சபை­யின் முன்­னாள் உறுப்­பி­னர் தி.நிரோஸ் முதல் ஓர் ஆண்­டுக்கும் இரண்­டா­வது ஆண்­டில் இரா­சேந்­தி­ர­மும் தவி­சா­ள­ரா­கப் பதவி வகிப்­பர் என­வும் எஞ்­சிய இரண்டு ஆண்­டு­க­ளும் தமிழ் அர­சுக் கட்சி சார்­பி­லான உறுப்­பி­னர் தவி­சா­ள­ராக நிய­மிக்­கப்­ப­டு­வார் என்று தீர்மானிக்­கப் பட்­டது.
உப தவி­சா­ள­ராக தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்த திரு­நா­வுக்­க­ரசு நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளார் என்று மேலும் தெரிவிக்­கப்­பட்­டது.

No comments