Header Shelvazug

http://shelvazug.com/

வடக்கின் முதலமைச்சராகின்றார் சர்வேஸ்வரன்!

வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் நாளையதினம்(11-04-2018) பொறுப்பேற்கிறார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஆன்மீக சுற்­றுப்­ப­யணம் ஒன்­றை மேற்கொண்டு இன்றையதினம் தமி­ழகம் பயணமாகிறார்.
அவர் இரண்டு வாரங்களுக்கு அங்கு தங்­கி­யி­ருப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இந்த நிலையில் வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் நாளை பதவியேற்கிறார்.
பத்திரமுல்லவில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில் நாளைக் காலை 10.30 மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே முன்னிலையில் க.சர்வேஸ்வரன் பதவியேற்கிறார்.