தமிழ் நீதிபதிகளில் நம்பிக்கையில்லை:வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி!


என்­னில் நம்­பிக்கை இல்லை எனில் வேறு ஒரு நீதி­ப­தியை நிய­மித்து தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் வழக்கை நடத்­துங்­கள் என்று விச­னித்­தார் வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி சசி­ ம­கேந்­தி­ரன்.
தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரு­டைய வழக்கு நேற்று வவு­னியா மேல் நீதி­மன்­றில் விசா­ர­ணைக்­காக எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.
வவு­னி­யா­வைச் சேர்ந்த அரச சட்­டத்­த­ரணி எஸ்.சி.பகீம் வழக்கு விசா­ர­ணை­களை எதிர்­வ­ரும் மே மாதம் 15ஆம் திக­திக்கு மாற்ற வேண்­டும் என்று மன்­றில் கோரி­னார். சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தின் அதி­காரி வரா­த­தைக் கார­ணம் காட்­டியே வழக்கை திகதி மாற்ற வேண்­டும் என்று அவர் கோரி­னார். அப்­போதே நீதி­பதி சசி­ம­கேந்­தி­ரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.
“தமிழ் அர­சி­யல் கைதி­க­ளு­டைய வழக்கு விசா­ர­ணை­கள் வெவ்­வேறு நீதி­மன்­றங்­க­ளுக்கு மாற்­றப்­ப­டு­கி­றது. தற்­போது விசா­ர­ணை­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன. என்­னில் நம்­பிக்கை இல்லை என்­றால் இந்த வழக்­குக்கு வேறு ஒரு நீதி­ப­தியை நிய­மித்து வழக்கை நடத்­துங்­கள்”- என்று அவர் குறிப்­பிட்­டார்.
அரச சட்­டத்­த­ரணி கேட்­டுக் கொண்ட திக­தி­யன்று கட்­டா­யம் அர­சி­யல் கைதி­க­ளின் வழக்கு விசா­ர­ணை­கள் இடம்­பெ­றும் என்­றும் உத்­த­ர­விட்­டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 25ஆம் திக­திக்கு முன்­னர் வவு­னியா மேல் நீதி­மன்­றில் இடம்­பெற்று வந்த அனு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் அடைத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரின் வழக்கு விசா­ர­ணை­கள் 2017ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 25ஆம் திக­திக்­குப் பின்­னர் அனு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றுக்கு மாற்­றப்­பட்­டது.
தமது வழக்­கு­களை மீண்­டும் வவு­னி­ய­வுக்கு மாற்­று­மாறு கோரி மதி­ய­ர­சன் சுலக்­சன், இரா­ச­துரை திரு­வ­ருள், கனே­சன் தர்­சன் ஆகிய மூன்று அர­சி­யல் கைதி­க­ளும் உணவு ஒறுப்­புப் பேராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அவர்­க­ளு­டைய கோரிக்கை ஏற்­கப்­பட்­டதை அடுத்து அவர்­கள் போராட்­டத்­தைக் கைவிட்­ட­னர். சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தால் வழக்கு வவு­னி­யா­வுக்கு மாற்­றப்­பட்­டது.

வழக்­கு­வி­சா­ர­ணை­கள் வவு­னி­யா­வில் இடம்­பெ­று­வ­தற்­கான கட்­ட­ளையை வவு­னியா நீதி­மன்று அனுப்­பி­யது. அர­சி­யல் கைதி­கள் மூவ­ரும் நேற்று வவு­னியா மேல் நீதி­மன்­றுக்கு விசா­ர­ணை­க­ளுக்­காக அழைத்­துச் செல்­லப்­பட்­டி­ருந்­த­னர்.

No comments