ஆனந்தபுரம் முற்றுகைப்போரில் வீவீரகாவியமானவர்களுக்கு எமது வீரவணக்கம்

உலக விடுதலைப் போராட்டங்களை எடுத்துப் பார்க்குமிடத்து அவற்றை விஞ்சிய ஆனந்தபுரம் முற்றுகைப்போர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நினைவில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய பல போர்க்களங்கள் நாம் கண்டுள்ளோம்.
வியப்பின் உச்சியில் ஆழ்த்தக்கூடிய சாதனைகளைப் படைத்த வீரவரலாறுகள் எமக்கே சொந்தம். உலக விடுதலைப் போராட்டங்களை எடுத்துப் பார்க்குமிடத்து அவற்றை விஞ்சிய தியாகங்களையும்இ அர்ப்பணிப்புக்களையும் எங்கள் தமிழீழ விடுதலைப் போராளிகள் தமது வாழ்க்கையாகவே கருதி வாழ்ந்துள்ளார்கள் என்பது புலப்படும். ஒவ்வொரு மாவீரர்களின் வாழ்க்கையும் ஒரு பெரிய சரித்திரமே. உலகின் மிகச்சிறந்த தலைமைத்துவத்தால் வழிநடத்தப்பட்ட வீரம்செறிந்த விடுதலைப்பாதை பல பாடங்களையும் எமக்குக் கற்றுத்தந்துள்ளது என்றால் மிகையல்ல.
அந்த வகையிலே மிக வித்தியாசமானதொரு களமாக ஆனந்தபுரத்தில் நிகழ்தேறியே முற்றுகைபோர்.

விடுதலை அல்லது வீரச்சாவு என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தபடி ஒவ்வொரு போராளிகளும்இ பொறுப்பாளர்களும்இ  தளபதிகளும் அக்களத்தில் சாதனை படைத்தனர். பல நூற்றுக்கணக்கான இராணுவத்தைக் கொன்று குவித்தனர். உண்ண உணவு இல்லைஇ குடிக்க தண்ணீர் கூட இல்லை அனைத்து உதவிகளும் தடை செய்யப்பட்ட நிலையில் தமக்கேற்பட்ட சோர்வைக் கூட மறந்த  நிலையில் தம்மிடம் இருந்த வளங்களை வைத்து சாவின் உச்சக்கட்டத்தில் கூட  தர்மயுத்தம் நடத்தினார்கள். அக்களத்தில் போரிட்ட ஒவ்வொரு வீரர்களுடைய அழிக்க முடியாத வரலாறுகளும் அவர்களுடைய செங்குருதிகளால்  அந்த மண்ணில் பதியப்பட்டது .

பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் கடாபி /ஆதவன் , பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் மணிவண்ணன்,  பிரிகேடியர் விதுசா உட்பட  பல போராளிகள்  ஆனந்தபுரம் முற்றுகைப்போரில் வீராகவியமானார்கள், அவர்களுக்கு எமது வீரவணக்கம்.


நன்றி
வெளியீட்டுப்பிரிவு
அனைத்துலகத்தொடர்பகம்
 

No comments